Friday, July 1, 2011

நகலகங்கள் பல கோடி

வாசிக்கும் புத்தகத்தை யாசித்தே பெற்றோரே!
 நேசிக்கும் கல்விதனை யோசித்தே விற்றோரே!

சீரழிய உமக்கொரு நாள் சீக்கிரமே வந்திடுமோ? 
பாரறிய பெற்றிடுங்கால் பட்டமென்று ஆகிடுமோ?

பிரதியெடுத்து விற்றவர், உரிமைகளைப் பெற்றவர்
அவருரிமை உமக்கில்லை படிப்பதற்கே ஆயினும்.

நகலெடுக்கும் இயந்திரமோ உரிமையுடன் செயலாற்ற; 
ஆக்கியதேன் அதையும் நீர் கள்ளச்செடி பயிராக்க!

எத்தனையோ வெட்டியாக செல்வம்பல இறைத்தாய்;
 புத்தகத்தை வாங்கிடத்தான் சொன்னவனை முறைத்தாய்!

எழுதியவன் செலவிட்ட நேரங்கள் அதிலே... 
அப்போது அவன்பட்ட சிரமங்கள் அதிலே...

அவன்வயிற்று எரிச்சலைத்தான் பலமடங்கு ஆக்க,
 நகலகங்கள் பல கோடி யாரிதனைக் கேட்க?

No comments:

Post a Comment