Monday, July 4, 2011

வெறுமை !

ஒவ்வாச் சிரிப்பும்
ஒன்றுமில்லாக் கலப்பும்
ஒண்டிய விரிப்பும்
ஒப்புக்கு ஒட்டிக்கொள்ள

சதா சகா சங்கம் போற்றி
சதாகதியில் சந்தணி சேர்த்து
சந்தங்காட்டிச் சபலமாக்கி
சந்தடி நடுவில் சுந்தரங் காட்டி

நிசாகரன் ஓதி ஓயும் வரை
நிசா முழுதும் நிணறி நிகதி
நிபுட நடனங்கள் நிமிடி
நிமிர நிகலமுந் தாங்கி

தனக்கட்டு தனையிறைத்து
தற்சனிக் கோலங்கள் கூடவிறக்கி
தறுவாய் வரத் தவியாய்த் தனகி
தளி கலந்தே தளப்பிழந்து

நாசி பிடித்து நாச்செறு தவிர்த்து
நாசுக்காய் நாதக்குழலூதி
நாந்தி நாம்பி நாயுறக்கம் போட்டு
நார்மடி போர்த்து நாவிலை மடித்து

ஓய்விலா ஓட்டமோடி
ஓமப்பொடி புகட்டி ஓராயிரம் கதை பேசி
ஓவாமல் ஒக்கிப்புழுகி
ஓரடிக்கோரடி ஓராயம் போற்றி

நாலாவிதம் சேர்த்தாகினும்
நாமறுதிப் பார்த்தாகினும்
நாற்றென மறுமுறை நாடியாகினும்
நாமுடியடக்கி நாங்கித்தான் பார்க்கினும்

வேற்றுமையொன்று தெரிகிறதே - இது
வேறிலை வெறுமை புரிகிறதே !!

வேற்றுமையொன்று தெரிகிறதே - இது
வேறிலை வெறுமை புரிகிறதே !!

No comments:

Post a Comment