இருட்டுக்குப் பசி என்று அந்திமாலைச் சூரியனை விழுங்கியது.பொறுப்பற்ற சோதிடனின் புலம்பல் குறி தவறியது.
தாவரச் சாதியெல்லாம் சாவதற்குப் போகிறது!ஒளிச்சேர்க்கையே தவறுகையில் வெளிச்சேர்க்கை எதற்கு?
செவ்வாயில் தோசமென்றீர் தோசமுள்ள வரன்பிடித்தீர்
எவ்வாயில் சொன்னீரோ அவ்வாயாலாயே விதி என்றீர்.
பெண்மயில் கலங்குவதால் மனம் கொஞ்சம் வலிக்கிறது!சோதிடத்தை வைத்தெரிக்க தணல் பறக்கும் அடுப்புவேண்டும்!மானுடத்தை மகிழவைக்கும் மானம்காக்கும் உடுப்புவேண்டும்!
No comments:
Post a Comment